காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே வண்டலுர் வாலாஜாபாத் சாலையிலுள்ள படப்பை பஜார் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் சில மாதங்களாகவே மிகவும் மந்தமாக நடக்கும் மேம்பால பணியால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மேம்பாலம் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?