காஞ்சீபுரம் மாவட்டம் பூந்தமல்லி டிரங் சாலையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி எதிரே இருக்கும் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அடிக்கடி அந்த பகுதியில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா ?