திருவையாறு அடுத்துள்ள திருமானூர் மிக அருகில் திருமழபாடி என்ற ஊர் அமைந்துள்ளது.அங்கு மிகவும் பிரசித்தி பெற்ற வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இக்கோயிலுக்கு தமிழக முழுவதும் உள்ள பக்தர்கள் தினந்தோறும் வருகின்றனர். இந்த நிலையில் நுழைவாயில் முன்பு மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை தண்ணீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவையாறு