தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மனையேறிப்பட்டி கிராமம்.இச்சாலை வழியாக தஞ்சாவூர்-திருச்சிக்கும் இடையே ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன.இந்நிலையில் மனையேறிப்பட்டி பஸ் நிலையத்தில் பயணியற் நிழற்குடையின் இருபுறமும் ஊர் பெயர் பலகை இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தத்தில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்பழகன்,களிமேடு