காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர், படப்பை அடுத்த சாலமங்கலம் ஊராட்சி பகுதிக்கு செல்லும் ஊராட்சி ஒன்றிய சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?