மாங்காடு, குன்றத்தூர் வழியாக தாம்பரத்திலிருந்து பூந்தமல்லிக்கு(தடம் எண்: 66) பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அலுவலக நேரமான காலை வேளையில் மேற்கூறிய பஸ்சானது கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது. மேலும் பள்ளி செல்லும் மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ்சில் தொங்கிகொண்டு வருகிறார்கள். பஸ் செல்லும் பாதையில் போக்குவரத்து போலீசார் இருந்தும் மாணவர்களை கண்டிக்க மறந்துவிடுகிறார்கள். இதற்கு மாற்று தீர்வாக அலுவலக நேரங்களில் (தடம் எண் : 66) பஸ்சின் என்ணிக்கையை அதிகரித்து சீரான இடைவெளியில் பஸ்கள் இயங்குவதற்கு வழி செய்ய வேண்டும்.