காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் 4 ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கையாக போக்குவரத்து பொலீசார் நியமிக்கப்பட்டனர். ஆனால் வாகன நெரிசலுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. நேற்று குன்றத்தூரிலிருந்து கோவூர் செல்லும் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் மக்களும் நேரத்துக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே குன்றத்தூர் 4 ரோடு பகுதியில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.