கால்வாயை சீரமைக்க கோரிக்கை

Update: 2022-09-08 14:06 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ரங்கசாமி குளம் பகுதியில் இருந்து திருக்கச்சி நம்பி தெரு, வேகவதி நதி ரோடு வழியாக செல்லும் கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பெயரளவிற்கு மட்டுமே குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறுகலான பகுதியாக உள்ள திருக்கச் நம்பி தெரு பின்புறம் உள்ள கழிவு நீர் கால்வாயில் ஏராளமான குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் தேங்கி உள்ளது. இதனை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்