காஞ்சீபுரம் மாவட்டம் கெங்கை அம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே தனியார் பள்ளி உள்ளது. இந்த இடத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோர்கள் பெரும் சிரமத்துக்கு இடையே பள்ளியை அடைகின்றனர். எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் மேற்கூறிய இடத்தில் போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.