காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த நிலையில் குன்றத்தூர் 4 ரோட்டிலிருந்து கோவிலுக்கு செல்வதற்கு வழிகாட்டி பலகை எதுவும் வைக்கப்படவில்லை. இதனால் வெளியூரிலிருந்து வரும் மக்கள் கோவிலுக்கு செல்லும் பாதையை கண்டுபிடிக்க சிரமமாக உள்ளது. எனவே பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு வழிகாட்டி பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.