காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர், படப்பை பகுதியிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் புஷ்பகிரி சாலையானது குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் இரவு வேளைகளில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் விபத்துக்குள்ளாகி காயம் ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. மோசமான நிலையில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
