காஞ்சீபுரம் மாவட்டம் கோவூர் பகுதியிலிருந்து மாங்காடு, குமணன் சாவடி ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தினமும் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் கோவூரிலிருந்து மேற்கூறிய பகுதிகளுக்கு செல்ல நேரடி பஸ் வசதியோ, மினி பஸ் வசதியோ இல்லை. இதனால் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் தினம் தினம் ஒரு விலையை மாற்றி வைத்து ஆட்டோ ஓட்டுகிறார்கள். இதனால் நடத்தர மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். கோவூர் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி இருப்பதால் பூந்தமல்லியிலிருந்து கோவூர் செல்ல மினிபஸ் சேவையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.காஞ்சீபுரம் மாவட்டம் கோவூர்