காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் திம்மையன் பேட்டை சின்னத்தெருவில் மழை நீர் செல்ல வடிகால் வசதி இல்லை. இதனால் மழை காலத்தில் வீடுகள் மற்றும் தெருவினில் மழைநீர் தேங்கி பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தைச் சுற்றிலும் நீர் சூழ்ந்துள்ளதால் குழந்தைகள் நடந்து செல்லவும் சிரமமாக உள்ளது. வழி பிறக்குமா?