காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலம் முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் இருந்து செங்கல்பட்டு, வண்டலூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகிறது. ஆனால் சாலையோரங்களில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளால் இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்குமா?