கொசுமருந்து அடிக்கப்படுமா?

Update: 2022-09-03 14:42 GMT


தஞ்சையில் தற்போது பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ராஜீவ்நகர் வடக்கு , சோழன் நகர், அண்ணா நகர் மற்றும் பல்வேறு இடங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தற்போது டெங்கு காய்ச்சல், மலேரியா போன்று தொற்றுநோய்கள் பரவி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தஞ்சை நகரில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்