காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு, குன்றத்தூர், பட்டூர் ஆகிய பகுதிகளிலிருந்து பிராட்வே செல்ல பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்யும் பஸ்கள் இயங்கி வருகின்றன. ஆனால் அவை மிக குறைவான அளவிலேயே இயக்கப்படுகின்றன. தினமும் அதிகமான பெண்கள் வேலை காரணமாக அரும்பாக்கம், மதுரவாயல், எழும்பூர் போன்ற பகுதிகளுக்கு சென்று வருவதால், பஸ்சின் எண்ணிக்கையை அதிகபடுத்த வேண்டுகிறோம்.