சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-03 13:34 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரியிலிருந்து வேலப்பன் சாவடி, வானகரம் வரை உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் இந்த சாலையை கடந்து செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்