காஞ்சீபுரம் மாவட்டம் செவிலிமேடு எம்பெருமான் கோவில் தெருவில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இப்படி வெளியேறும் தண்ணீர் தெரு முழுவதும் பரவி சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக பள்ளி குழந்தைகள் சென்று வர சிரமமாக உள்ளது. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சேற்றில் சறுக்கி கீழே விழும் சம்பவங்களும் நிகழ்கின்றன. சாலையை சீர் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?