குன்றத்தூரிலிருந்து பிராட்வே செல்லும் (தடம் எண்: 53 E) பஸ்சானது பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் பஸ்சாகும். இந்த பஸ்சில் காலை நேரத்தில் சேத்துப்பேட்டில் உள்ள அரசினர் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்கள் பஸ்சில் உள்ள படிகளில் நின்று கொண்டு கானா பாட்டு பாடுவதும், பஸ்சில் தாளம் போடுவதும், தகாத வார்த்தைகள் உபயோகிப்பது என அவர்களின் இம்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வயதான பெண்கள், முதியோர்கள், நடத்துனர் என யாரும் அவர்களை கேள்வி கேட்பதில்லை. கேள்வி கேட்டால் மரியாதை குறைவாக ஏதும் பேசி விடுவார்களோ? என அச்சப்படுகிறார்கள். நிம்மதியான பஸ் பயணத்திற்கு வழி கிடைக்குமா?
