திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் கலைஞர் நகரில் சுமார் 20 முதல் 25 குரங்குகள் வசித்து வருகின்றன. அந்த வழியாக வரும் பொதுமக்கள் பைகளில் ஏதாவது கொண்டு சென்றால் பைகளை பிடுங்கி கடிக்க பாய்கிறது. இதன் காரணமாக யாரும் வீதியில் நடமாட முடியவில்லை.மேலும் குரங்குகள் வீட்டுக்குள்ளேயே புகுந்து வீட்டில் உள்ள பொருட்களையும் எடுத்துச் செல்கிறது. மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிகளின் மூடிகளை உடைத்து, குடிநீர் வரும் பைப்புகளையும் சேதப்படுத்துகிறது. மின்சார வயர்களின் மீது குரங்குகள் தொங்கிக்கொண்டு செல்கிறது.மின்சாரம் தாக்கி குரங்குகள் இறக்கும் அபாயமும் ஏற்படும் வாய்ப்புள்ளது.மேலும் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பேரம்பாக்கம் கலைஞர் நகரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடு…