காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரிலிருந்து பிராட்வே செல்ல (தடம் எண்: 53E) பஸ்சானது போக்குவரத்து துறையால் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் சில இடங்களில் பழுதடைந்தும் சில இடங்களில் ஓட்டை உடைசலாகவும் காட்சியளிக்கிறது. தற்போது மழை காலம் என்பதால் மழை பெய்யும்போது பஸ் உள்ளே இருக்கும் பயணிகள் குடை பிடித்து செல்லும் அளவுக்கு தண்ணீர் கசிகிறது. எனவே போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள மேற்கூறிய பஸ்சை சீரமைத்து தர வேண்டுகிறோம்.