காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் உள்ள சாலைகளில் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகிறார்கள். சில நாட்களில் கால் நடைகள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. வாகன ஓட்டிகள் மற்றும் கால்நடைகளின் நலன் கருதி மேற்கூறிய பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.