காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் போந்தூர் போஸ்ட் தெரசாபுரம் பகுதியில் உள்ள சாலை படு மோசமாக உள்ளது. சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நடந்து செல்பவர்களே சறுக்கி கீழே விழுந்து விடுகிறார்கள். வாகன ஓட்டிகளின் நிலைமை இன்னும் மோசம். சம்பந்தபட்ட நிர்வாகம் ஆய்வு செய்து சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.