சோழவரம் பகுதியிலுள்ள செம்புலிவரம் அடுத்த ஜி.என்.டி. சர்வீஸ் சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் விபத்துக்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. மேலும் அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் இந்த சாலையில் செல்வதற்கு இடையூறாக இருக்கிறது. எனவே சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.