காஞ்சீபுரம் மாவட்டத்திலிருந்து வண்டலுர் செல்வதற்கு வாலாஜாபாத் வழியாக 6 வழி சாலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சாலையில் படப்பை, ஒரகடம், செரப்பனஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள கால்நடைகள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள், சாலைவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கால்நடைகள் விபத்தில் சிக்குவதற்கு முன் தகுந்த நடவடிக்கை தேவை.