காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள குளம் தூர்வாரப்படாமலும் பராமரிப்பு இல்லாமலும் உள்ளது. இதனால் குளத்தில் பாசிகள் படர்ந்தும், குப்பைகள் சேர்ந்தும் காணப்படுகிறது. மேலும் குளத்தில் உள்ள நீர் மாசடைந்து வருவதால் குளத்தை தூர்வாரவும் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.