காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரிலிருந்து கோவூர் செல்லும் சாலையில் தனியார் பள்ளி உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. இந்த சாலையில் பயணம் செய்யும் மக்களுக்கு கால விரயம் ஏற்படுவதோடு வேலைக்கு செல்லும் மக்கள் நேரத்துக்கு செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.