காஞ்சீபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் பகுதியில் வாழும் மக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் பிரச்சினைகளை கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் தான் தெரிவித்து வந்தார்கள். ஆனால் தற்போது செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதால் மணிமங்கலம் காவல்துறையை அணுகவேண்டிய நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மேலும் மணிமங்கலம் காவல் நிலையம் செல்வதற்கு நேரடியாக போக்குவரத்து வசதிகள் கிடையாது. பொதுமக்களின் சிரமம் போக்க வழி காணப்படுமா?