நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-08-29 14:49 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியிலிருந்து வண்டலூர் செல்லும் சாலையில் அரசு விதிகளை மீறி கனரக வாகனங்கள் வேகமாக செல்கிறது. இதனால் இந்த சாலையில் கால்நடைகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. மேலும் பொதுமக்கள் சாலையை கடக்கவே அச்சப்படுகிறார்கள். போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினையை சீர் செய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்