திருச்சிற்றம்பலத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம், அறந்தாங்கி ரோட்டில் செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தின் முன்பு செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இந்த அலுவலகம் அருகே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்- திருச்சிற்றம்பலம்.