புகார் பெட்டியால் குடிநீர் வினியோகம்

Update: 2022-08-28 17:46 GMT

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சிக்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் வினியோகம் செய்வதில்லை என்றும், இதனால் குடிநீருக்காக பொதுமக்கள் அலையும் நிலை இருந்தது என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதனையடுத்து அதிகாரிகள் துரித நடவடிக்கையில் இறங்கினர். அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-சிவா, மல்லசமுத்திரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்