காஞ்சீபுரம் காவலான்கேட் தோப்பு தெருவில் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையிலேயே மழைநீர் தேங்கி உள்ளது. நீண்ட நாட்களாக கழிவுநீர் அகற்றப்படாமலே இருப்பதால் அந்த பகுதியே அசுத்தமாக காட்சியளிக்கிறது. இதனால் தூர்நாற்றம் வீசுவதோடு இந்த சாலையை கடந்து செல்ல பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள்.