காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு சிகிச்சை பெறுவதற்காக செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் உள்ள அவசரகால தாய் சேய் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் குடிநீர் வசதி இல்லை. மேலும் கழிப்பறைகளில் தண்ணீர் வசதி இல்லாததால் குழந்தை பெற்ற தாய்மார்கள் அவதிக்குள்ளாகிறார்கள். அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?