போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-27 14:42 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் 4 ரோடு சந்திக்கும் பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோவூர் போன்ற பகுதிகளில் தனியார் பள்ளிகள் இருப்பதால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் இந்த சாலையை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். பல நாட்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுவதால், விபத்து ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே குன்றத்தூர் 4 ரோடு சந்திக்கும் பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்