பயன்பாட்டில் இல்லாத பூங்கா

Update: 2022-08-27 14:41 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் எம்.எம்.அவென்யூ தெய்வ சிகாமணி நகர் பகுதியில் உள்ள பூங்கா பயன்பாட்டில் இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் இந்த பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. மதுப்பிரியர்கள் குடித்துவிட்டும், சீட்டு விளையாடியும் வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெண்கள் குழந்தைகள் நடந்து செல்லவே அச்சமாக உள்ளது. காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடவும், பூங்காவை புதுபித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்