திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் மெட்ரோ ரெயில் வேலை நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. பூந்தமல்லி டிரங்க் சாலையை கடந்து செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழலும் ஏற்படுகிறது. எனவே மெட்ரோ ரெயில் வேலையை விரைந்து முடித்து போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?