திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை பகுதியில் கெங்கையம்மன் குளம் உள்ளது. திருநின்றவூர் பெரியபாளையம் சாலையில் அமைந்துள்ள இந்த குளம் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பராமரிக்கப்படாமலே இருப்பதால் குளம் முழுவதும் ஆகாய தாமரைகள் படர்ந்து உள்ளது. குளத்தில் உள்ள நீரே தெரியாதவறு படர்ந்து இருக்கும் ஆகாய தாமரைகளை அகற்றவும், குளத்தை பராமரிக்கவும் நடவடிக்கை தேவை.