காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வல்லப்பாக்கம் பகுதியில் உள்ள பாலாற்றில் இருந்து சிலர் இரவு நேரங்களில் மணல் கடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்கள் நீண்ட நாட்களாக நடக்கிறது. மேலும் இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தி செல்பவர்கள் வேகமாக செல்வதால் விபத்துக்களும் நடக்கிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?