கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

Update: 2022-08-24 14:26 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குமணன் சாவடி பஸ் நிறுத்தத்தில் இருந்து பிராட்வே செல்வதற்கும், கோயம்பேடு செல்வதற்கும் போக்குவரத்து துறை சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் (தடம் எண்-101, 101 x) பஸ்கள் பூந்தமல்லியிலிருந்து பிராட்வே, மற்றும் திருவொற்றியூர் வரை சென்று வருகிறது. பூந்தமல்லி, மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வேலைக்கு செல்லும் பெண்கள் காலை 8 மணியிலிருந்து நீண்ட நேரம் பஸ்சுக்காக கத்திருக்கிறார்கள். மேற்கூறிய பஸ்கள் மிக குறைவான அளவிலேயே( ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ்) வருகிறது. இதனால் கூட்டம் அலை மோதுகிறது. எனவே பெண்கள், முதியவர்களின் சிரமத்தை போக்க 101, 101 x, பஸ்களை அதிகமான அளவில் விட வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்