பழுதடைந்த சாலை

Update: 2022-08-23 14:54 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நீலமங்கலம் கிராமத்திற்கு செல்லும் சாலை குண்டு குளியுமாக காட்சியளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் சேரும் சகதியமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே நீலமங்கலம் கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்