காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சி, ஆதனூரிலிருந்து கூடுவாஞ்சேரி செல்லும் நெடுஞ்சாலையை கால்நடைகள் ஆக்கிரமிப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால் கால்நடைகள் காயமடைவதும், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதும் அன்றாடம் நடக்கிறது. மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.