காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் உள்ள பணப்பாக்கம் , நீலமங்கலம், வடக்குப்பட்டு சந்திப்பு ஆகிய பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புறக்காவல் நிலையத்தில் போதிய போலீசார்கள் பணியில் இல்லாததால் புறக்காவல் நிலையம் சரிவர இயங்காமலும், பூட்டியும் கிடக்கிறது. புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?