சாலையா? கழிவுநீர் செல்லும் பாதையா?

Update: 2022-08-23 14:49 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் விளக்கடி கோவில் தெருவில் கழிவுநீர் வெளியேறி சாலை முழுவதும் தேங்குவதோடு, தூர்நாற்றம் வீசி அசுத்தமாகவும் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். கழிவு நீர் அகற்றும் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவு நீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்