நெடுஞ்சாலையில் இடையூறு

Update: 2022-08-22 14:14 GMT

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரகடம் பகுதியில் முக்கிய சாலையாக சிங்கப்பெருமாள் கோவில் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் 6 வழி சாலை உள்ளது. ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வரும் சரக்கு வாகனங்கள் 6 வழி சாலையில் உள்ள சர்வீஸ் சாலை மற்றும் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்