திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் சிவன் கோவில் தெருவில் போலீஸ் நிலையம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் உள்ள கம்பத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பி துருபிடித்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.