உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை

Update: 2026-05-10 16:32 GMT

ஆரணி-ஆற்காடு நெடுஞ்சாலையில் இரும்பேடு கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள உயர் கோபுர மின் விளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரியவில்லை. அந்தப் பகுதி முழுவதும் மொத்த விற்பனை அங்காடிகள் நிறைந்த பகுதி ஆகும். அங்கு 200-க்கும் மேற்பட்ட லாரிகள், 500-க்கும் மேற்பட்ட சரக்கு ஆட்டோக்கள் வந்து செல்லக்கூடிய பகுதி ஆகும். எனவே உயர் கோபுர மின் விளக்கை உடனடியாக எரிய விட மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராகவேந்திரன், ஆரணி. 

மேலும் செய்திகள்