தஞ்சை மாவட்டம் தொண்டராயன்பாடி கிராமத்தில் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் தெருக்கள் இருள் சூழ்ந்து கிடப்பதால், பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்று வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தொண்டராயன்பாடி.