மதுரை தபால்தந்தி நகர், பாமா நகர் அருகே உள்ள மல்லிகை 3-வது தெருவில் உள்ள மின் விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்களிடேயே திருட்டு அச்சம் எழுந்துள்ளது. மேலும் இதனால் வாகன ஓட்டிகளும் விபத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதி மின்விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?