தேன்கனிக்கோட்டை அருகே சின்ன பூதுகோட்டை கிராமத்தில் விவசாய நிலத்தில் மின்கம்பி தாழ்வாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டு யானை தும்பிக்கையால் மின் கம்பியை தொட்டு யானை மீது மின்சாரம் பாய்ந்தது. இதுகுறித்து பலமுறை மின்சார வாரிய அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அது சரி செய்யப்படவில்லை. எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பியை உடனடியாக உயர்த்தி அமைக்க வேண்டும்.