ஆபத்தான மின்கம்பங்கள்

Update: 2026-06-14 11:12 GMT

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகாவுக்கு உட்பட்ட பொன்னம்பட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள சில மின்கம்பங்கள் சிதிலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால், உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே இந்த மின்கம்பங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மின்வெட்டு